» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கணவர் இறந்த வருத்தத்தில் மனைவி தற்கொலை

வியாழன் 7, நவம்பர் 2019 7:40:45 PM (IST)

மார்த்தாண்டம் அருகே கணவர் இறந்த வருத்தத்தில் அவரது மனைவியும் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மார்த்தாண்டம் நட்டாலம் பகுதியைச் சேர்ந்தவர் அம்புரோஸ். இவரது மனைவி ஸ்டெல்லாபாய், ( 55).ஸ்டெல்லாபாயின் கணவர் கடந்த மாதம் இறந்து விட்டார். இதில் ஸ்டெல்லா பாய் மன வருத்தத்துடன் காணப்பட்டாராம். மேலும் யாரிடமும் பேசாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ஸ்டெல்லாபாய் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குழித்துறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினார்கள். இது குறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory