» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தொழில் முனைவோருக்கான ஆலோசனை கூட்டம் : குமரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

வியாழன் 7, நவம்பர் 2019 6:23:06 PM (IST)

தொழில் முனைவோருக்கான ஆலோசனை கூட்டம் வரும் 15ம் தேதி நடைபெறுகிறது என குமரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுடன் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 31.10.2019 அன்று பிற்பகல் 4 மணிக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெறவிருந்த ஆலோசனைக் கூட்டம் கனமழை காரணமாக மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.  இந்த ஆலோசனைக் கூட்டமானது எதிர்வரும் 15.11.2019 (வெள்ளிக்கிழமை) அன்று பிற்பகல் 3.30 மணியளவில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெறவுள்ளது. 

எனவே கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் மேற்குறிப்பிட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைத் தெரிவிக்குமாறு, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்.மு.வடநேரே, தெரிவித்துள்ளார் .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory