» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நித்திரவிளை அருகே வீடு புகுந்து ரூ.88 ஆயிரம் திருட்டு

வியாழன் 7, நவம்பர் 2019 1:27:34 PM (IST)

நித்திரவிளை அருகே காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய போது மர்ம நபர்கள் வீடு புகுந்து ரூ.88 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நித்திரவிளை அருகே உள்ள சின்னதுறையை சேர்ந்தவர் ஷாஜி. இவரது மனைவி பீனா ( 25). கடந்த 3-ந்தேதி பீனா இரவிபுத்தன்துறையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். அப்போது தனது கைப்பையில் அவர் ரூ.88 ஆயிரத்து 600-ஐ எடுத்துச் சென்றிருந்தார்.பணப்பையை அவர் தாய் வீட்டு அலமாரியில் துணிகளுக்கு நடுவே வைத்திருந்தார். 4-ந்தேதி இரவு வீட்டின் பின் கதவை பூட்டிவிட்டு முன் கதவை காற்றுக்காக திறந்துவைத்துவிட்டு வீட்டில் இருந்தவர்கள் தூங்கச் சென்றுவிட்டனர். 

மறுநாள் காலை எழுந்து பார்த்த போது வீட்டின் பின் பக்க கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பீனா, பணம் வைத்த அலமாரிக்கு சென்று பார்த்தார். அங்கு இருந்த சுமார் ரூ.88 ஆயிரத்து 600 திருடப்பட்டு இருந்ததாம்.இரவு கதவு திறந்து கிடந்ததை நோட்டமிட்ட யாரோ வீட்டிற்குள் புகுந்து பணத்தை திருடிக் கொண்டு பின்பக்க கதவை திறந்து கொண்டு தப்பிச் சென்று உள்ளனர். இந்த துணிகர திருட்டுப்பற்றி நித்திரவிளை போலீசில் புகார் செய்யப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory