» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் தேதி,இடம் : கன்னியாகுமரி ஆட்சியர் அறிவிப்பு

வியாழன் 7, நவம்பர் 2019 12:56:26 PM (IST)

தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டுள்ள அம்மா திட்டத்தின் ஐந்தாம் கட்ட சிறப்பு முகாம் 08.11.2019 வெள்ளிக்கிழமை அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறுவட்டங்களில் கீழ்கண்டவாறு நடைபெறவுள்ளது.

அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் நீண்டகரை எம் மேற்கு வருவாய் கிராமத்தில்அரசு தொடக்கப்பள்ளி, தம்மத்துக்கோணம், தோவாளை வட்டத்தில் அனந்தப்புரம் வருவாய் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி, அனந்தப்புரம்,கல்குளம் வட்டத்தில் வெள்ளிச்சந்தை எம்  வருவாய் கிராமம், வெர்சிலி நடுநிலைப்பள்ளி, உன்னங்குளம், திருவட்டார் வட்டத்தில் பேச்சிப்பாறை வருவாய் கிராமத்தில்;, கிராம ஊராட்சி அலுவலகம், பேச்சிப்பாறை, விளவங்கோடு வட்டத்தில் அண்டுகோடு எம் வருவாய் கிராமத்தில், பி.பி.எம் மேல்நிலைப்பள்ளி, அண்டுகோடு, கிள்ளியூர் வட்டத்தில் மெதுகும்மல் வருவாய் கிராமத்தில், அரசு நடுநிலைப்பள்ளி, நடைக்காவு ஆகிய இடங்களில் வைத்து காலை 10 மணியளவில்  நடைபெறவுள்ளது.

இந்த அம்மா திட்டம் ஐந்தாம் கட்ட சிறப்பு முகாமில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வருவாய் வட்டாட்சியர் அதிகாரத்திற்குட்பட்ட நில தாவாக்கள், குடிநீர் மற்றும் சாலை வசதி போன்ற பொதுவான மனுக்களை பொதுமக்கள் அளித்து தீர்வு காணலாம் எனவும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory