» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அபாய கட்டத்தை எட்டுகிறது பெருஞ்சாணி அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

திங்கள் 21, அக்டோபர் 2019 7:40:16 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை வெள்ள அபாய அளவை எட்டியது. தாமிரபரணி மற்றும் பரளியாற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடம் செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெருஞ்சாணி அணை வெள்ள அபாய அளவான 71 அடி கொள்ளளவை எட்டியுள்ளது. அதிக மழை காரணமாக 75 அடியை தொடும்பட்சத்தில் தொடர்ந்து வரும் தண்ணீர் பெருஞ்சாணி அணையில் இருந்து திறந்து விடப்படவுள்ளது. . 

இதனால் பரளியாறு மற்றும் தாமிரபரணி ஆற்று கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory