» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் : குமரி மாவட்டஆட்சியர் உத்தரவு

திங்கள் 21, அக்டோபர் 2019 6:44:52 PM (IST)குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.  கொசுக்களால் பரவும் நோய்களான, மலேரியா, டெங்கு, போன்ற நோய்களும், தண்ணீரால் பரவும் நோய்களான மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற நோய்களிலிருந்து மக்களை பாதுகாக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, உத்தரவிட்டுள்ளார்.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே பேசியதாவது,  டெங்கு காய்ச்சல் ஒருவகை வைரஸ் நோயாகும்.  இந்நோய் பகலில் கடிக்கும் ஏடிஸ் வகை கொசுக்கள் மூலம் பரவுகிறது.  டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசு சுத்தமான நீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கிறது.  ஏடிஸ் கொசு உருவாகும் இடங்களை அழித்து வீடு, பள்ளி, பொது இடங்கள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொண்டால் மட்டுமே டெங்கு காய்ச்சலை தடுக்கமுடியும்.  

அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், பொது இடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த டெங்குதடுப்பு விழிப்புணர்வு முகாம், நிலவேம்பு கசாயம் வழங்குதல், விழிப்புணர்வு பேரணிகள் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.  அனைத்து வியாழக்கிழமைகளிலும் டெங்கு எதிர்ப்பு தினமாக அரசு அலுவலகங்கள்  அரசு மற்றும் தனியார் பள்ளிகள், பேருந்துநிலையங்கள,; ரயில் நிலையங்கள், காவல் நிலையங்கள், அரசு மற்றும் தனியார் சந்தை பகுதிகளில் கொசுப் புழு ஒழிப்பு பணிகள் முனைப்புடன் செயல்படுத்தப்பட்டுவருகிறது. 

அரசு மற்றும் 148 தனியார் மருத்துவமனைகளில் உள்ள காய்ச்சல் உள்நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் தகவல் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட கிராமங்களில் தடுப்பு நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதிலும் காய்ச்சல் கண்ட இடங்களில் கொசுப் புழு ஒழிப்பு நடவடிக்கைகளோடு புகை மருந்து அடிக்கும் பணியும் முனைப்போடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 245 புகை மருந்து அடிக்கும் கருவிகள் இப்பணிக்காக பயன்படுத்தப்பட்டுவருகிறது.  அப்பணிக்கு தேவையான மருந்துகளும் தேவையான அளவு இருப்பில் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory