» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் கனமழை: பெருஞ்சாணி அணை மூடல்

திங்கள் 21, அக்டோபர் 2019 11:13:16 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு கன மழை பெய்தது. அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்ததையடுத்து, பெருஞ்சாணி அணை மூடப்பட்டது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாக மழை பெய்துவரும் நிலையில், சனிக்கிழமை இரவும் மழை நீடித்தது. மாம்பழத்துறையாறு அணைப் பகுதியில் பலத்த மழை பெய்தது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும், மலையோரப் பகுதியான பாலமோரிலும் கன மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. தொடா்ந்து மழை பெய்துவருவதால் பெருஞ்சாணிஅணை மூடப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory