» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை : மாணவ ,மாணவிகள் மகிழ்ச்சி

திங்கள் 21, அக்டோபர் 2019 10:52:12 AM (IST)

தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில் மார்த்தாண்டம்,குழித்துறை, குலசேகரம், திருவட்டார் என மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் கனமழை பெய்ததால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் சாலைகளும் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இந்நிலையில் கனமழை தொடர்ந்ததால்  கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவ ,மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory