» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இஸ்ரோ தலைவர் சிவன் படித்த பள்ளியில் தீ விபத்து

ஞாயிறு 20, அக்டோபர் 2019 12:53:38 PM (IST)

நாகர்கோவில் அருகே இஸ்ரோ தலைவர் சிவன் படித்த அரசு பள்ளியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

நாகர்கோவில் அருகே சரக்கல்விளையில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 70 மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்.இந்த பள்ளியின் வளாகத்தில் தனியாக சத்துணவுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அதில்தான் சத்துணவு ஊழியர்கள் தினமும் மதிய உணவு தயார் செய்வது வழக்கம்.இதில் சம்பவத்தன்று காலை சுமார் 11 மணி அளவில் சிலிண்டரின் குழாயில்  கேஸ் கசிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் கேஸ் கசிவு ஏற்பட்ட குழாய் பகுதியில் திடீரென தீப்பிடித்தது. பின்னர் இந்த தீ  பற்றிப்பிடித்து சிலிண்டரின் பர்னர் பகுதி வரை தீ பரவியது.

இதைப்பார்த்ததும் சமையல் செய்து கொண்டிருந்த சத்துணவு ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு அந்த சத்துணவு கூடத்தைவிட்டு வெளியே ஓடிவந்தனர். இதையடுத்து ஆசிரியர்கள், மாணவர்களை பள்ளியை விட்டு அவசர, அவசரமாக வெளியேற்றினர். இதனால் மாணவர்கள் அலறியடித்து ஓடினர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பள்ளி மாணவ-மாணவிகளின் பெற்றோரும் அப்பகுதி பொதுமக்களும் அங்கு திரண்டனர். மாணவ- மாணவிகளை அவர்களது பெற்றோர் அவசர, அவசரமாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இந்த விபத்தில் சமையல் பாத்திரங்கள், சாக்குகள், சமையலறை கதவு, மின்வயர் செல்லும் குழாய்கள் போன்றவை தீயில் கருகி சேதம் அடைந்தன. 

இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்த அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அப்துல்லா மன்னான் மற்றும் அதிகாரிகள் தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர்.தீ விபத்து நடந்த இந்த பள்ளியில் தான் இஸ்ரோ தலைவர் சிவன் தொடக்க கல்வி பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory