» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வாகன சோதனையின்போது போலீசை மிரட்டிய 3 பேர் கைது

வியாழன் 17, அக்டோபர் 2019 8:40:15 PM (IST)

வெட்டூர்ணிமடம் பகுதியில் வாகன சோதனையின் போது எஸ்ஐ.,யை மிரட்டி, அரசுப்பணி செய்ய விடாமல் தடுத்ததாக  3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வடசேரி போலீஸ் போலீசார் வெட்டூர்ணிமடம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக லாரி ஒன்று வேகமாக வந்தது. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த லாரியை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த லாரி டிரைவர் மற்றும் லாரியில் இருந்தவர்கள் சப்-இன்ஸ்பெக்டரை அவதூறாக பேசி. அரசுப்பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கு இருந்த போலீசார் அவர்களை மடக்கிப்பிடித்தனர். இது குறித்து வடசேரி போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா புகார் செய்தார். லாரியை காவல் நிலையம் கொண்டு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதில் அவர்கள் திருச்சியில் இருந்து எந்தவித அனுமதியும் இன்றி நாகர்கோவிலுக்கு மணல் கடத்தி வருவது தெரிய வந்தது. மேலும் லாரியை ஓட்டிவந்த ராஜ்குமார் ( 45), ஸ்டாலின்ஜோஸ் (31), தாவீதுராஜா (24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory