» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் செல்போன் பறிப்பு

வியாழன் 17, அக்டோபர் 2019 7:14:13 PM (IST)

இரணியல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் பணம், செல்போன் பறிக்கப்பட்டது.

கன்னியாகுமரி இரணியலை அடுத்த பரம்பை பகுதியை சேர்ந்தவர் சஜின். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சுபாஷினி (28). இவர் சம்பவத்தன்று நெய்யூர் பகுதியில் உள்ள ஒரு வங்கிக்கு பணம் எடுப்பதற்காக இருசக்கர வாகனத்தில் வந்திருந்தார். பின்னர் அவர் வங்கிக்கு இருந்து வீடு திரும்பி கொண்டிருந்தார்.பரம்பை அருகே வரும் போது அவருக்கு பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் வந்தார். திடீர் என்று அந்த வாலிபர் சுபாஷினியின் வாகனம் அருகே சென்று அவர் கழுத்தில் போட்டிருந்த கைப்பையை பறிக்க முயன்றார். இதில் நிலை தடுமாறி சுபாஷினி கீழே விழுந்தார்.

இதனை பயன்படுத்திக் கொண்ட அந்த மர்ம இளைஞர் அவரது கைப்பையை பறித்தார். சுபாஷினி தனது கைப்பையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு  கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் வருவதற்குள் கொள்ளையன் சுபாஷினியின் கையை தட்டிவிட்டு கைப்பையை பறித்துக் கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். சுபாஷினி கைப்பையில் சுமார் ரூ.7 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் செல்போன், வங்கி பாஸ்புக் ஆகியவை இருந்தது.இதுகுறித்து இரணியல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கொள்ளையனை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory