» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நவீனப்படுத்தப்பட்ட விற்பனைக்கூட காட்சியறை : அமைச்சர் ஓ.எஸ் மணியன் திறந்து வைத்தார்

வியாழன் 17, அக்டோபர் 2019 1:43:22 PM (IST)நாகர்கோவில், வடசேரியில் நவீனப்படுத்தப்பட்ட விற்பனைக்கூட, கூடுதல் காட்சியறையை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் மணியன் ,தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம்  ஆகியோர், கைத்தறி மற்றும் துணிநூல்துறை இயக்குநர் கருணாகரன், முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரே,தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திறந்து வைத்தார். 

விழாவில், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் மணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-கைத்தறியானது மெல்லியதானது. எனவே, மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. கைத்தறி துணிகளை கோ-ஆப்டெக்ஸ் ஆகியவற்றின் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ரூ.270 கோடியாக அதன் விற்பனை உள்ளது. கைத்தறி விற்பனையை ரூ.300 கோடியாக உயர்த்த வேண்டும் என்பதே நோக்கமாகும். அது விரைவில் நிறைவேறும் இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக, தோவாளையில் அமைந்துள்ள டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மலர் வணிக வளாகத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இவ்விழாவில், மாவட்ட எஸ்பி., ஸ்ரீநாத்  மாவட்ட ஆவின் பெருந்தலைவர் அசோகன்,  அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் ஜாண்தங்கம், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவர் கிருஷ்ணகுமார், வடசேரி பெரியராசிங்கன் கைத்தறி கூட்டுறவு நெசவாளர் உற்பத்தி  சங்கத்தலைவர் சகாயராஜ், அரசு அலுவலர்கள், சங்க உறுப்பினர்கள், நெசவாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory