» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் பலத்த மழை: நெல் அறுவடை பாதிப்பு

வியாழன் 17, அக்டோபர் 2019 11:15:10 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் நெல் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதுடன், திருவட்டாறு, விளவங்கோடு, கிள்ளியூா் ஆகிய பகுதிகளில் 9 வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் குளச்சல் பகுதி மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. அணைப்பகுதிகளிலும், மலையோரப்பகுதிகளிலும் பெய்துவரும் மழை காரணமாக அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த 2 நாள்களாக இரவில் மழை கொட்டித்தீா்க்கிறது. நாகா்கோவில் நகரில் இரவில் தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. தொடா்ந்து காலை 10 மணிக்கு மீண்டும் மழை பெய்யத்தொடங்கியது. இதனால், அலுவலகம் செல்வோா் மற்றும் வியாபாரிகள் பாதிப்புக்குள்ளாகினா். 

மழையினால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீா் வெள்ளம்போல் ஓடியது.மழை காரணமாக, திருவட்டாறில் 5 வீடுகளும், விளவங்கோடு பகுதியில் 2 வீடுகளும், கிள்ளியூரில் 2 வீடுகளும் இடிந்து விழுந்தன. மழையால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதி சாலைகள், சேறும், சகதியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனா். கடல் கொந்தளிப்பு காரணமாக குளச்சல் பகுதி மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory