» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சுற்றுலா திட்டப் பணிகள் : கன்னியாகுமரி ஆட்சியர் ஆய்வு

புதன் 16, அக்டோபர் 2019 8:13:59 PM (IST)கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.9.37 கோடி செலவில் நடைபெற்று வரும் சுற்றுலா திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக, கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டம் மற்றும் தமிழ்நாடு கடற்கரை சுற்றுலா மேம்பாடும் இணைந்து சுதேதர்ஷன் திட்டத்தின் கீழ் ரூ.9.37 கோடி செலவில் சுற்றுலாப் பயணிகளுக்கு 9 விதமானஅடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில்  ரூ.41.87 இலட்சம் செலவில் 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தேக்க தொட்டியுடன் குடிநீர் விநியோக பைப்லைன்கள், பீச் ரோடு, பேரூராட்சி அலுவலக வளாகம் மற்றும் பூம்புகார் ஆகிய இடங்களில் குடிநீர் வசதிகளும்,  ரூ.50.64 இலட்சம் செலவில் பீச் ரோடு, கன்னியாகுமரி பேருந்து நிலையம் ஆகிய இடங்களில்  இ-டாய்லெட்டுகளும், ரூ.1.26 இலட்சம் செலவில்  குப்பைகளை சேகரிப்பதற்கான 20 குப்பைத் தொட்டிகளும், ரூ.11.63 இலட்சம் செலவில் 25 சூரிய சக்தி தெருவிளக்குகளும், ரூ.16.89 இலட்சம் செலவில் கடற்கரை சுற்றுலா இணைப்புச் சாலைகளும்,ரூ.8.84 இலட்சம் செலவில் கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள முதலுதவி மையத்திற்கான உபகரணங்களும், ரூ.6.79 கோடி செலவில் கடல் காட்சியை கண்டு களிப்பதற்கான இருக்கைகள் அமைப்பதற்கும்,  ரூ.98.25 இலட்சம் செலவில் சிலுவை நகர் முதல் சூரியன் மறையும் இடம் வரை அழகு தரை ஓடுகளும், ரூ.27.64 இலட்சம் செலவில்  கன்னியாகுமரி பேரூராட்சிக்கான கனரக இயந்திரங்கள் வாங்கவும் ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது.  

இப்பணிகளை விரைந்து முடித்து, அரசின் விதிகளுக்குட்பட்டும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தரமானதாக இருக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்த ஆய்வில்,  உடன் உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கண்ணன், மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன், உதவி செயற் பொறியாளர்கள் சனல்குமார், இருதின் ஜெயராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory