» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சீமான் மீது தேச துரோக வழக்கு : காங்கிரஸ் புகார்

புதன் 16, அக்டோபர் 2019 7:59:26 PM (IST)

நாம்தமிழர் கட்சி சீமான் மீது தேச துரோக வழக்கு பதிய வேண்டுமென தக்கலை போலீசில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

இது குறித்து குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் ராஜா, தக்கலை போலீசில் அளித்த புகாரில், சமீபத்தில் கூட்டத்தில் பேசிய சீமான், முன்னாள்பிரதமர் ராஜீவ்காந்தியை கொன்றது சரியே என பொருள்படும்படி பேசியுள்ளார். மேலும் வரலாறு திரும்ப எழுதப்படும் என சர்ச்சைகுரிய வகையில் பேசியுள்ளார். அவரது பேச்சு தேசதுரோகமாகவும், வன்முறையை தூண்டும் வகையிலுள்ளதால் சீமான் மீது தேச துரோக வழக்கு பதிய வேண்டும் என புகாரின் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory