» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

போலீசாரை மிரட்டிய ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது

வியாழன் 10, அக்டோபர் 2019 1:54:03 PM (IST)

குலசேகரம் அருகே போலீசாரை மிரட்டிய ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

குலசேகரம் நாகக்கோடு சந்திப்பில் வாடகை கார் ஓட்டுனர் சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா நடந்தது. விழாவில் ஏழை மக்களுக்கு இலவச தையல் எந்திரம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவையொட்டி இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதனை காண ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். இந்த நேரத்தில் நிகழ்ச்சியை காண வந்த சிலர் ரகளையில் ஈடுபட்டார்களாம். நிகழ்ச்சிக்கு பாதுகாப்புக்கு வந்த போலீசார் ரகளையில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து செல்லும்படி கூறினார்கள். ஆனால் அவர்கள் போலீசாரின் அறிவுரையை கேட்காமல் தகராறில் ஈடுபட்டனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் லிங்கம் மற்றும் வாடகை கார் ஓட்டுனர்களுக்கும் வாக்கு வாதம் நடைபெற்றது.

அப்போது போலீசார் ஒரு வாலிபரை பிடித்து காவல்நிலையம் கொண்டு சென்றனர். இதை கண்டதும் அவரதுநண்பர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து போலீசாரை மிரட்டியதாக தெரிகிறது.இதனையடுத்து போலீசாரை மிரட்டியதாக குலசேகரம் பகுதியை சேர்ந்த லெனின்( 27), அரமன்னம் பகுதியை சேர்ந்த கோபி(53), அண்ணா நகரை சேர்ந்த விபின் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் லெனின் ராணுவ வீரர் ஆவாா். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

லாரி - பைக் மோதி விபத்து : பிளஸ் 1 மாணவா் பலி

வெள்ளி 25, செப்டம்பர் 2020 11:00:33 AM (IST)

Sponsored Ads




Thoothukudi Business Directory