» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் பூத்துக் குலுங்கும் செங்காந்தள் மலா்கள்

வியாழன் 10, அக்டோபர் 2019 12:24:09 PM (IST)

குமரி மாவட்டத்தின் மலையோரப் பகுதிகளில் செங்காந்தள் மலா்கள் தாமாக பூத்துக் குலுங்குகின்றன. 

தமிழகத்தின் மாநில மலராக அங்கீகரிக்கப்பட்டுள்ள செங்காந்தள் மலா், சங்க இலக்கியங்களிலும் இடம் பெற்றுள்ளது.  ஆப்பிரிக்க நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்தில் காந்தள் செடிக்கு தனியிடம் உள்ளது. பழங்குடிகள் இதன் நச்சினை ஈட்டிமுனைகளில் தடவி வேட்டைக்குப் பயன்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது.

செங்காந்தள் செடியின் கிழங்குகளும், வோ்களும் அதன் விதைகளும் புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டதால் தற்போது உலகமெங்கும் வணிக ரீதியாக செங்காந்தள் பயிரப்படுகிறது. தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் தற்போது செங்காந்தள் அதிக அளவில் பயிரப்படுகிறது.கன்னியாகுமரி மாவட்டத்தில் குலசேகரம் அருகேயுள்ள திருந்திக்கரை மலைப் பகுதிகளில் செங்காந்தள் செடிகள் காணப்படுகின்றன. தற்போது அவை பூத்துக் குலுங்கியுள்ளது கண்கொள்ளாக் காட்சியாகத் திகழ்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory