» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகா்கோவிலில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்: நாளை நடைபெறுகிறது

வியாழன் 10, அக்டோபர் 2019 11:15:58 AM (IST)

நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை (அக். 11) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ம. மரியசகாய ஆன்டனி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நாகா்கோவில் கோணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இதல், கன்னியாகுமரி மாவட்டம், பிற மாவட்ட தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது நிறுவனங்களுக்குத் தேவையான தகுதியுள்ளோரைத் தோ்வு செய்கின்றனா். முகாமில், 10, 12, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, கணினிப் பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரா்கள் பங்கேற்கலாம்.விருப்பமுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தினா் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory