» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வாய்க்காலில் ஆண் சடலம் : தனிப்படை போலீஸ் தீவிர விசாரணை

புதன் 9, அக்டோபர் 2019 6:46:27 PM (IST)

மயிலாடியில் வாய்க்காலில் ஆண் சடலம் கிடந்த சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

குமரி மாவட்டம் மயிலாடி இரட்டை குளக்கரையில் இருந்து குலசேகரபுரம் செல்லும் வழியில் தண்ணீர் வாய்க்காலில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அஞ்சுகிராமம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அஞ்சுகிராமம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். அந்த சடலம் சுமார் 20 நாட்களாக கிடந்ததாக கூறப்படுகிறது. 

உடல் அழுகிய நிலையில் இருந்ததால் இறந்தவர் யார் என்பதில் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் எதற்காக கொலை செய்யப்பட்டார். கொலையா அல்லது தற்கொலையா என தெரியவில்லை. இது குறித்து பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory