» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி பரிவேட்டை

புதன் 9, அக்டோபர் 2019 11:36:07 AM (IST)

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழாவின் 10ஆம் நாளான்று பணாசூரன் என்ற அரக்கனை அம்மன் வதம் செய்யும் பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகம் மற்றும் நவராத்திரி திருவிழா 10 நாள்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். நேற்று 10ஆம் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் அம்மன் அலங்கார மண்டபத்தில் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதையடுத்து காலை 10.30 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. நண்பகல் 12.15 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி, பரிவேட்டைக்காக மகாதானபுரம் நோக்கி ஊா்வலமாகப் புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, பாரம்பரிய முறைப்படி துப்பாக்கி ஏந்திய போலீஸாா் அணிவகுப்பு மரியாதை செய்தனா்.

பரிவேட்டை ஊா்வலத்தில் யானை, குதிரை, முத்துக்குடை ஏந்திய பெண்கள் அணிவகுக்க 500க்கும் மேற்பட்ட கலைஞா்கள் பங்கேற்ற நையாண்டி மேளம், கரகாட்டம், காவடி ஆட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், செண்டை மேளம், பஞ்ச வாத்தியம், கேரள புகழ் தையம் ஆட்டம், அம்மன் வேடமணிந்த பக்தா்களின் நடனம் ஆகியவை இடம்பெற்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory