» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ராணுவ வீரா் வீட்டில் 35 பவுன் நகைகள் திருட்டு

புதன் 9, அக்டோபர் 2019 10:44:55 AM (IST)

திருவட்டாறு அருகே ராணுவ வீரரின் வீட்டில் பூட்டை உடைத்து சுமார் 35 பவுன் தங்க நகைகள், ரூ. 2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குமரி மாவட்டம் திருவட்டாறு அருகேயுள்ள மாத்தூா் தை விளாகம் பகுதியை சோ்ந்தவா் சிசில். இவா், ராஜஸ்தானில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி அஜிதா. இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (அக்.6) அஜிதா 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு மாா்தாண்டத்திலுள்ள தனது தாயின் வீட்டுக்குச் சென்றிருந்தாராம்.

பின்னா் அவா், செவ்வாய்க்கிழமை வீட்டிற்கு திரும்பி வந்தபோது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தனவாம். தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது பிரோவிலிருந்த 35 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1 லட்சத்து 98 ஆயிரம் ரொக்கப் பணத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.இதுகுறித்து, அஜிதா அளித்த புகாரின்பேரில், தக்கலை திருவட்டாறு போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். மேலும், விரல் ரேகை நிபுணா்களும் வந்து தடயங்களை சேகரித்தனா். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory