» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து : இளைஞர் பலி

புதன் 11, செப்டம்பர் 2019 6:15:56 PM (IST)

நாகர்கோவிலில் அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார்பைக் மீது மோதிய விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நாகர்கோவில் சகோதரர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணி செய்து வந்தார்.கிருஷ்ணனின் மகன் ஆனந்த் (23). செல்போன் சர்வீஸ் செய்து கொடுக்கும் பணி செய்து வந்தார். நேற்று இரவு இவர் வீட்டில் இருந்து நண்பரின் வீட்டுக்கு சென்றார்.இரவு நெடுநேரம் ஆகிவிட்டதால் ஆனந்த் நண்பர் வீட்டிலேயே தங்கி விட்டாராம். இன்று அதிகாலை ஆனந்த் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். நாகர்கோவில் இந்து கல்லூரி அருகே வந்த போது அந்த வழியாக சென்ற வாகனம் ஆனந்த் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் தூக்கி வீசப்பட்ட ஆனந்த் தலையில் அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அதிகாலை நேரம் என்பதால் ஆனந்த் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை யாரும் பார்க்கவில்லை. இதனால் அவர் உயிருக்கு போராடினார்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு அந்த வழியாக வந்தவர்கள் ஆனந்த் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர். உடனே அவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து ஆனந்தை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி ஆனந்த் பரிதாபமாக இறந்து போனார். இது பற்றி நாகர்கோவில் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ஆனந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். மேலும் ஆனந்த் சென்ற மோட்டார்பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது என்பது பற்றியும் விசாரித்தனர். இதற்காக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

விநாயகர் கோவில் கதவை உடைத்து உண்டியல் கொள்ளை

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 8:25:16 PM (IST)

நர்சிங் மாணவி திடீர் மாயம்: போலீஸ் விசாரணை

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 5:54:26 PM (IST)

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory