» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாயாரின் 2வது கணவர் கைது

புதன் 11, செப்டம்பர் 2019 12:09:04 PM (IST)

குளச்சல் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அச்சிறுமியின் தாயாரின் 2-வது கணவரை போலீசார் கைது செய்தனர்.

குளச்சல் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் வயிற்று வலியால் அவதிபட்டார். சிறுமியின் உறவினர்கள் சிறுமியை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்து பார்த்த போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சிறுமியின் கர்ப்பத்துக்கு யார்? காரணம் என்பது தெரியாமல் திகைத்தனர். மேலும் இது பற்றி குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. இதில் அச்சிறுமியின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன்பின்பு சிறுமியின் தாயார் அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சசிகுமார் ( 40) என்பவருடன் சேர்ந்து வாழ்ந்தார். அவரையே 2-வது திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிகிறது.

தாய், 2வது திருமணம் செய்ததால் சிறுமி அவரது பாட்டி வீட்டிற்கு சென்று விட்டார். அங்கேயே தங்கி இருந்த சிறுமியை கடந்த மார்ச் மாதம் சிறுமியின் தாயார் தன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.வீட்டிற்கு வந்த பின்பு தாயார் இல்லாத நேரத்தில் அவரது 2-வது கணவர் சிறுமியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார். மேலும் அவரை பாலியல் பலாத்காரமும் செய்தார். இதில் சிறுமி கர்ப்பம் ஆனது தெரியவந்தது.போலீசார் விசாரணையில் இச்சம்பவம் தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர் மீது போக்சோ பிரிவில் வழக்குபதிவு செய்தார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory