» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வேலை கிடைக்காததால் இளைஞர் தற்கொலை

செவ்வாய் 10, செப்டம்பர் 2019 7:44:30 PM (IST)

தக்கலை அருகே வேலை கிடைக்காததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த காட்டாத்துறை கோட்டவிளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் அஜீஸ் (வயது 35).
இவர் படித்து முடித்து வேலை தேடிவந்ததாகவும் ஆனால் அவரது படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் அவர் மன வேதனையுடன் இருந்து வந்தார். மேலும் அவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்து வந்தனர். ஆனால் அவருக்கு பெண் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.பத்மநாபபுரத்திற்கு அஜீஸ் சென்றுவிட்டு வீடு திரும்பினார். பின்னர் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வீடு திரும்பிய பெற்றோர் இதை கண்டு அதிர்ச்சியடைந்து இந்த சம்பவம் குறித்து தக்கலை போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

விநாயகர் கோவில் கதவை உடைத்து உண்டியல் கொள்ளை

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 8:25:16 PM (IST)

நர்சிங் மாணவி திடீர் மாயம்: போலீஸ் விசாரணை

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 5:54:26 PM (IST)

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory