» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகள் தீவிரம்

புதன் 21, ஆகஸ்ட் 2019 12:33:26 PM (IST)

இரணியல் அருகே 1½ அடி முதல் 10 அடி வரை உயரம் உள்ள பிரமாண்டமான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

விநாயகர் சதுர்த்தி வருகிற 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தையொட்டி மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது. இரணியல் அருகே உள்ள கண்ணாட்டுவிளையில் பிர மாண்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.இங்கு 1½ அடி முதல் 10 அடி வரை உயரம் உள்ள பிரமாண்டமான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. சிங்க வாகனத்தில் விநாயகர் அமர்ந்திருப்பது போன்ற சிலைகள் 10 அடி உயரத்தில் வடிவமைக்கப்படுகிறது.

இதேப்போல மயில் வாகனம், குதிரை வாகனம், எலி வாகனம், காளை மாடு வாகனம், தாமரை இதழ் மீது அமர்ந்த விநாயகர் என்று பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாராகிறது. இயற்கை வண்ணங்களை பயன்படுத்தி விநாயகர் சிலைகளில் வர்ணம் பூசப்படுகிறது. பலவித வடிவங்களில் வண்ண மயமாக காட்சி அளிக்கும் இந்த விநாயகர் சிலைகளை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் ஆர்வத்துடன் பார்த்தபடி செல்கிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory