» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் நாளை மின்தடை அறிவிப்பு

புதன் 21, ஆகஸ்ட் 2019 10:43:51 AM (IST)

குழித்துறை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பளுகல் உயர் அழுத்த மின் பாதையின் சிறப்பு பராமரிப்புப் பணிகள் காரணமாக மூவோட்டுக்கோணம் பகுதியில் வியாழக்கிழமை நாளை (ஆக. 22) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முவோட்டுக்கோணம், மலையடி, செக்குமூடு, சமுதாயப்பற்று, சாணி, மேக்கோடு, மண்ணரிப்பு, பனச்சக்குழி, செழுவன்சேரி, வன்னியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என குழித்துறை மின் விநியோக உதவி செயற்பொறியாளர் அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory