» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தாய் திட்டியதால் விரக்தி : இளைஞர் தற்கொலை

செவ்வாய் 20, ஆகஸ்ட் 2019 8:41:13 PM (IST)

ராஜாக்கமங்கலம் அருகே  தாயார் திட்டியதால் இளைஞர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ராஜாக்கமங்கலம் அருகே சரல் சூரப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் சுயம்பு. இவரது ஒரே மகன் மணிகண்டன், (25).இவர், கொத்தனார் வேலைக்கு சென்று வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதியதாக வீடு ஒன்று கட்டினார்கள். இதனால் கடன் ஏற்பட்டது. வாங்கிய கடனை செலுத்துவதற்காக சுயம்பு, முயற்சிகளை மேற்கொண்டாராம்.ஆனால் மணிகண்டன் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக தெரிகறிது. இதனால் அவரது தாயார் மணிகண்டனை திட்டியதாக தெரிகிறது. 

மனம் உடைந்து காணப்பட்ட மணிகண்டன் வி‌ஷம் குடித்தார்.மாலையில்தான் மணிகண்டன் வி‌ஷம் குடித்த தகவல் அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. உடனே அவரை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மேல் சிகிச்சைக்காக மணிகண்டன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.இது குறித்து போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory