» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தெப்பக்குளத்தில் மூழ்கி இளைஞர் பரிதாப பலி

செவ்வாய் 20, ஆகஸ்ட் 2019 8:25:22 PM (IST)

வடசேரி கிருஷ்ணன்கோவில் தெப்பக்குளத்தில் மூழ்கி வாலிபர் பலியானார்.

வடசேரி கிருஷ்ணன் கோவில் அருகுவிளை திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் ஜார்ஜ். இவரது மகன் ஆதி (19).இவர் கோவில் ஒன்றிற்கு செல்வதற்காக மாலை அணிந்து விரதமிருந்து வந்தார். சம்பவத்தன்று மாலை வீட்டில் இருந்து சென்ற ஆதி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து அவரை உறவினர்கள் தேடினார்கள். ஆனால் ஆதியை காணவில்லை.

இந்த நிலையில் இரவு கிருஷ்ணன் கோவில் தெப்பக்குளத்தில் ஆதி வைகுண்டம் பிணமாக கிடப்பது தெரிய வந்தது. இதையடுத்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

ஆதி  உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் ஆதி, குளத்தில் குளிக்கும்போது தவறி விழுந்து பலியாகி இருப்பது தெரிய வந்தது.இது குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory