» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குளச்சல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடல் அரிப்பு

செவ்வாய் 20, ஆகஸ்ட் 2019 5:53:30 PM (IST)

குமரி மாவட்டம் குளச்சல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென கடல் மட்டம் உயர்ந்து கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

குளச்சல் முக்கியமான மீன்பிடி கடற்கரை கிராமம் ஆகும். மீன்பிடி படகுகள் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரை பகுதியான நீண்டகரை முதல் நீரோடி வரையிலான அரபிக்கடல் பகுதிகளில், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கடல்மட்டம் உயர்ந்து சீற்றத்துடன் காணப்படுவது வழக்கம்.அதன்படி குளச்சல், கொட்டில்பாடு, வாணியக்குடி, கடியப்பட்டணம் பகுதிகளில் தற்போது கடல் நீர் மட்டம் உயர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுவதோடு, கடல் அரிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 10 அடி உயர மண் மேடு அரித்து செல்லப்பட்டதோடு, கடல்நீர் வீடுகளுக்குள் புகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.வரும் நாட்களிலும் கடல் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், கரையோர வீடுகளை பாதுகாக்கும் வகையில் அலைதடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory