» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தக்கலை அருகே தூக்க மாத்திரை தின்றவர் மரணம்

புதன் 14, ஆகஸ்ட் 2019 11:19:04 AM (IST)

தக்கலை அருகேஇளைஞர் ஒருவர் அதிக அளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டதில் உயிரிழந்தார்.  

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகேயுள்ள ராமன்பறம்பு  பகுதியைச் சேர்ந்த ஐயப்பன், வசுமதி தம்பதியினருக்கு கிரீஷ் (37),  சதீஷ் என இரு மகன்கள் உண்டு.  கிரீஷ் இளம் வயதிலேயே நோயினால் பாதிக்கப்பட்டு  மருத்துவ சிகிச்சை பெற்று வந்தாராம்.  இதனால் அவர் மிகுந்த  மன வேதனையுடன்  இருந்து வந்தாராம். மேலும் தினசரி இரவு தூக்க மாத்திரை சாப்பிட்டு தூங்குவது வழக்கமாம்.இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு அதிக அளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு வீட்டில் மயங்கிக் கிடந்துள்ளார். 

குடும்பத்தினர் அவரை மீட்டு தக்கலை  அரசு மருத்துவமனையில் முதலுதவிஅளித்து, மேல் சிகிச்சைக்காக  ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு அவர் திங்கள்கிழமை இறந்தார். இதுகுறித்து அவரது சகோதரர் சதீஷ் அளித்த புகாரின்பேரில்  தக்கலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory