» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பாெறியாளர் வீட்டில் சுமார் 50 பவுன் நகை கொள்ளை

வெள்ளி 19, ஜூலை 2019 6:43:37 PM (IST)

குறும்பனை அருகே பாெறியாளர் வீட்டில் சுமார் 50 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

கருங்கலை அடுத்த குறும்பனை, இனிகோ நகரை சேர்ந்தவர் ஜேசர் பெனான்ஸ் (40).துபாய் நாட்டில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் தான் இவர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். அவரும் அவரது குடும்பத்தினர் வேளாங்கண்ணி ஆலயத்திற்கு சென்றனர். கடந்த புதன்கிழமை சென்ற அவர்கள் காலை வீடு திரும்பினர்.

இனிகோ நகர் வீட்டுக்கு சென்றதும் அங்கு வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. கதவின் அருகே பூட்டை உடைக்க பயன்படுத்திய ஸ்குரு டிரைவரும் காணப்பட்டது.வீட்டின் உள்ளே சென்றபோது படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த பொருள்கள் வீடு முழுவதும் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த சுமார் 50 பவுன் நகைகளும் மாயமாகி இருந்தது. இது குறித்து புகாரின் பாேில் கருங்கல் போலீசார் விசாரணை நடத்தினர்.மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கு சென்று கொள்ளையரின் கைரேகைகள் பதிவாகி உள்ளதா? என சோதனை செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory