» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

உரிமமின்றி செயல்படும் ஹோட்டல்கள் மீது நடவடிக்கை : குமரி ஆட்சியர் பேச்சு

வெள்ளி 19, ஜூலை 2019 1:48:15 PM (IST)

அக்டோபர் 1ம் தேதி முதல் உரிமம் இன்றி செயல்படும் ஹோட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வழிகாட்டுதல் குழு கூட்டத்தில் மாவட்டஆட்சியர் பிரசாந்த் வடநேரே கூறினார்.

உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்ட மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில்  நடந்தது. இதில் மாவட்டஆட்சியர் கூறியதாவது,மாவட்டம் முழுவதும் உள்ள உணவு பொருள் விற்பனை நிறுவனங்களில் (ஹோட்டல்கள், கடைகள்) இன்னமும் 25 சதவீத நிறுவனங்கள் உணவு பொருள் தயாரிப்பு உரிமம் மற்றும் பதிவுச்சான்று ஆகியவற்றை பெறாமல் இருக்கிறார்கள். எனவே 3 மாத காலத்துக்குள் அதாவது அடுத்த வழிகாட்டுதல் குழு கூட்டத்துக்கு முன் மீதமுள்ள 25 சதவீதம் பேரையும் உரிமம் மற்றும் பதிவுச்சான்று ஆகியவற்றை பெற செய்ய வேண்டும். இதற்காக இம்மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் உரிமம் மற்றும் பதிவு சான்று இல்லாமல் நடத்தப்படும் உணவு பொருள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் சுலைமான், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன், மாநகர நல அதிகாரி கின்சால், ஆவின்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory