» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சூறைக்காற்றுடன் மழை : 20 ஆயிரம் வாழைகள் நாசம்

வெள்ளி 19, ஜூலை 2019 12:58:30 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து நாசமாகி உள்ளது. 

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.களியக்காவிளை, தக்கலை, இரணியல் பகுதிகளில் இன்று காலையிலும் மழை பெய்தது. தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது. திற்பரப்பு அருவியிலும் வெள்ளம் கொட்டி வருகிறது.மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக் கூடிய தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.

கொல்லங்கோடு அருகே கிராத்தூர் வெங்குளம்கரை பகுதியில் மேற்கு கடற்கரை சாலையின் நடுவே அயனி மரம் ஒன்று பலத்த காற்று வீசியதில் முறிந்து விழுந்தது. இரவு நேரத்தில் மரம் முறிந்து விழுந்ததில் மீட்பு பணி நடைபெறவில்லை. பலத்த மழை காரணமாக சுமார் 20 ஆயிரம் வாழைகள் நாசம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory