» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரியில் விடிய விடிய காற்றுடன் கனமழை

வெள்ளி 19, ஜூலை 2019 11:56:29 AM (IST)

குமரி மாவட்டம் குளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளாவின் எல்லை மாவட்டமான குமரியிலும் மழை பெய்து வருகிறது. இதனால் குளச்சல், முட்டம், குறும்பனை உள்ளிட்ட கடலோர மீனவ கிராமங்களை சேர்ந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமரம், நாட்டுபடகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.கன்னியாகுமரியில் கடும் வறட்சி நிலவி வந்த நிலையில், ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை ஒருசில நாட்கள் மட்டுமே பெய்தது. இந்நிலையில் மீண்டும் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory