» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பேரிடர் மேலாண்மை குறித்து அறிய புதியசெயலி : குமரி ஆட்சியர் அறிவிப்பு

வியாழன் 18, ஜூலை 2019 8:20:34 PM (IST)

பேரிடர் மேலாண்மை குறித்து அறிய புதியசெயலி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் பேரிடர் மேலாண்மை மற்றும் இன்னல்கள் தொடர்பான விபரங்களை அறிய ஏதுவாக தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய செயலி  டிஎன் ஸ்மார்ட் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.  மேற்படி, செயலியை கூகுள் பிளே ஸ்டோர் என்ற தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.  

மேற்படி, செயலி வாயிலாக புயல், கனமழை, வெள்ளம், பேரிடர் தொடர்பான எச்சரிக்கை, மழை அளவு மற்றும் காலநிலை உள்ளிட்ட அனைத்து பேரிடர் மேலாண்மை நிகழ்வுகளையும் இந்த செயலி மூலம் பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory