» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இரட்டை கொலை சரண் அடைந்தவர்களிடம் விசாரணை

வியாழன் 18, ஜூலை 2019 7:41:54 PM (IST)

சுசீந்திரம் அருகே மினிபேருந்தில் ஏற்பட்ட தகராறில் 2 பேரை கொன்றதாக சரண் அடைந்த 2 பேர் போலீசார் நடத்திய விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

நாகர்கோவில்  வண்டிக்குடியிருப்பைச் சேர்ந்தவர் அர்ஜுன் ( 17), இவரது நண்பர் அஜித் குமார் (21). இவர்கள் இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது சி.டி.எம்.புரம் பகுதியில் வைத்து ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர்.இந்த கொலை வழக்கு குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் என்.ஜி.ஓ. காலனி காமராஜ் சாலையைச் சேர்ந்த ரமேஷ், மினி பஸ் டிரைவர் சுந்தர் ஆகிய இருவரும் சென்னை தாம்பரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். 

மற்ற 2 பேர் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளனர்.சரண் அடைந்த 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சுசீந்திரம் போலீசார் நாகர்கோவில் ஜே.எம்.3 கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, அடைந்த ரமேஷ், சுந்தர் இருவரையும் ஒருநாள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார்.

இதையடுத்து நேற்று மாலை இருவரையும் போலீஸ் காவலில் எடுத்தனர். ரமேஷ், சுந்தர் இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து நேற்றிரவு விடிய விடிய விசாரணை நடத்தினார்கள். அப்போது சுந்தர் போலீசில் கூறியதாவது:-நான், மினி பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறேன். இதில் வைத்து எனக்கும், கொலை செய்யப்பட்ட அர்ஜுனின் சகோதரர் அஜித்துக்கும், இடையே தகராறு ஏற்பட்டது.

இதில், அஜித் என்னை தாக்கினார். இது எனக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் அவரை கண்டித்தேன். ஆனால் அவர், தொடர்ந்து என்னுடன் தகராறு செய்து வந்தார். பிரச்சினை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு இருந்தது.அஜித்தின் சகோதரர் அர்ஜுனும் என்னிடம் பிரச்சினை செய்தார். சகோதரர்கள் இருவரும் என்னை காெல்ல முடிவு செய்திருப்பதாக நான் அறிந்தேன். 

இது தொடர்பாக எனது நண்பர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் நாம் முந்திக்கொள்வோம் என்று தெரிவித்தனர். சம்பவத்தன்று சகோதரர்களை கொல்ல நாங்கள் அந்த பகுதியில் காத்திருந்தோம். அர்ஜுன் மற்றும் அவரது நண்பர் அஜித்தும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை வழி மறித்து வெட்டினோம். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory