» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அதிகபாரம் ஏற்றி சென்ற 15 வாகனங்கள் பறிமுதல் 2 லட்சம் ரூபாய் அபராதம்

வியாழன் 18, ஜூலை 2019 1:52:26 PM (IST)

குமரி மாவட்டத்தில் அதிகபாரம் ஏற்றி சென்ற 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குமரி மாவட்டத்தில் அதிகபாரம் ஏற்றி வரும் வாகனங்களால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. வைக்கோல், மரத்தடிகள், பாறாங்கற்கள் என அதிக பாரம் ஏற்றி வரும் இந்த வாகனங்களில் பல அடி உயரத்திற்கு லோடு ஏற்றுகின்றனர். இந்நிலையில், மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி, வாகன ஆய்வாளர் சத்தியகுமார் உள்பட அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை கருங்கல், குலசேகரம், புதுக்கடை, தொலையாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் விடியவிடிய வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 

அப்போது 12 லாரிகள், 3 மினிலாரிகள் அதிக பாரம் ஏற்றி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இவற்றில் சில வாகனங்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை கோழிப்போர்விளையில் உள்ள மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இந்த வாகனங்களுக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory