» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

வியாழன் 18, ஜூலை 2019 12:37:44 PM (IST)

சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு விசைபடகுகள் மூலம் ஆழ்கடலில் மீன் பிடித்து வரும் 300-க்கும் மேற்பட்ட மீனவர்களின் படகுகள் இன்று கடல் சீற்றம் காரணமாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

குமரி மாவட்ட கடல் பகுதியில் சுனாமி தாக்குதலுக்கு பிறகு பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அடிக்கடி கடல் சீற்றம், கடல் நீர் நிறம் மாறுதல், கடல் உள்வாங்குதல், நீர் மட்டம் தாழ்வு போன்ற இயற்கை சீற்றங்கள் நிகழ்கிறது.கேரள கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் இந்திய கடல் தகவல் சேவை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதன் காரணமாக ஆழ்கடல் பகுதியில் கடல் கடும் சீற்றமாக காணப்படும். பலத்த காற்றும் வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த தகவல் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு அந்த ஊர் பங்கு தந்தைகள் மூலம் தெரிவிக்கப்பட்டது. மீனவர்கள் சங்கங்கள் மூலமும் மீனவர்களுக்கு இந்த எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டது.இன்று காலை முதலே குமரி மாவட்ட கடல் பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டது. கன்னியாகுமரி, குளச்சல், மணக்குடி, ராஜாக்கமங்கலம், பள்ளம் போன்ற பகுதிகளிலும் இன்று கடல் சீற்றமாக காணப்பட்டது. 10 அடி முதல் 15 அடி வரை உயரம் உள்ள அலைகள் கடலில் எழும்பியது .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory