» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஈத்தாமொழி அருகே சிறுமியை கடத்தி திருமணம் : வாலிபருக்கு வலை

வியாழன் 11, ஜூலை 2019 6:04:23 PM (IST)

ஈத்தாமொழி அருகே 15 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்து பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஈத்தாமொழியை அடுத்த புதூர் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வந்தார். பத்தாம்வகுப்புக்கு மேல் பள்ளிக்கு செல்லாததால் அந்த சிறுமி வீட்டிலேயே இருந்தார். கடந்த மே மாதம் வீட்டில் இருந்த சிறுமியை திடீரென காணவில்லை.சிறுமியை பல இடங்களிலும் தேடியும் அவரை காணவில்லை. இதனால் அவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.இந்த நிலையில் 15 வயது சிறுமியை நெடுவிளை பகுதியை சேர்ந்த தபீன் (வயது 20) என்ற வாலிபர் கடத்தி சென்றது தெரியவந்தது. அவர் சிறுமியை திருமணம் செய்து ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த தகவல் அறிந்த குழந்தைகள் நல பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று அதிரடியாக சிறுமி தங்கியிருந்த வீட்டிற்கு சென்றனர்.வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்தார். அவரை மீட்டு கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்த அதிகாரிகள், அவரை கடத்தி சென்றது பற்றி சிறுமியிடம் விசாரித்தனர். வாலிபர் தபீன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி தபீன் மீது போக்சோ சட்டப்படி வழக்கு பதிவு செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory