» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவில் அருகே இரண்டு இளைஞர்கள் படுகொலை

வியாழன் 11, ஜூலை 2019 1:47:41 PM (IST)

நாகர்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களை வழிமறித்த மர்ம நபர்கள் அவர்களை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

நாகர்கோவில் அருகே தென்தாமரைகுளம் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார்
(20), மற்றும் வண்டி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன் (17), நண்பர்களான இவர்கள் இருவரில் அர்ஜுனன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மினி பேருந்தில் பயணம் செய்த போது பேருந்து ஓட்டுனராக இருந்த சுந்தர் என்பவருடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  இந்த பிரச்சனையில் அர்ஜுனனுக்கு ஆதரவாக அவரது நண்பர் அஜித் குமார் இருந்து வந்துள்ளார், அதே போன்று சுந்தருக்கு ஆதரவாக அவரது நண்பர் ரமேஷ் இருந்து வந்துள்ளார்,

இப்பிரச்சனை குறித்து ஈத்தாமொழி, சுசீந்திரம் காவல் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டு உள்ளது நாகர்கோவில் அருகே சித்திரை திருமகராஜபுரம் என்ற இடத்தில் கால்வாய் கரை பகுதியில் இருசக்கர வாகனத்தில் வரும் போது எதிரே 3 இரு சக்கர வாகனத்தில் வந்து வழிமறித்த சுந்தர் மற்றும் ரமேஷ் தலைமையிலான மர்ம கும்பல் அஜித்குமார் மற்றும் அர்ஜுனன் ஆகியோரை கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர் இதில் படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் இவர்கள் இருவரின் அலறல் சப்தம் கேட்டு பொதுமக்கள் திரண்ட நிலையில் கொலைச்செய்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்,

இதனிடையே தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுசீந்திரம் போலீசார் அஜித் குமார் மற்றும் அர்ஜுனன் ஆகியோரின் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர், பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் சுந்தர் மற்றும் ரமேஷ் ஆகியோர் கொலை செய்த கையோடு சென்னைக்கு சென்று அங்குள்ள தாம்பரம் நீதிமன்றத்தில் சரணடைந்து உள்ளனர்,நீதிபதியின் உத்தரவின் பேரில் அவர்கள் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிலையில் அவர்களை விசாரணைக்கு எடுக்க சுசீந்திரம் போலீசார் சென்னை விரைந்து உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory