» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி : குமரி ஆட்சியர் துவக்கி வைப்பு

வியாழன் 11, ஜூலை 2019 1:24:45 PM (IST)



கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த்.வடநேரே மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில்  நடைபெற்ற உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியினை இன்று (11.07.2019) கொடியசைத்து, துவக்கி வைத்தார்.  

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, பெருகி வரும் மக்கள் தொகையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, மக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியானது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்திலிருந்து துவங்கி, மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சென்றடைந்தது. இப்பேரணியில்  தாய் சேய் நலத்தின் பாதுகாப்பு திட்டமிட்ட குடும்பத்தின் பொறுப்பு, மக்கள்தொகை பெருக்கம் தனி மனித முன்னேற்றத்தை தடுக்கும்  போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை, அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி, மகளிர் கிறிஸ்தவ கல்லூரி, தெ.தி.இந்துக்கல்லூரி, கிறாஸ் மருத்துவக்கல்லூரி ஆகிய கல்லூரிகளை சார்ந்த மாணவ, மாணவியர்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் ஏந்தி சென்றனர்.இப்பேரணியில், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மதுசூதனன், முதல்வர் (அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி) கிளாரன்ஸ் டேவி, கல்லூரி பேராசிரியர்கள், மாவட்ட மருத்துவ அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory