» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருச்செந்தூர் கோயிலில் ஆணி வருஷாபிஷேக விழா

வியாழன் 11, ஜூலை 2019 12:26:35 PM (IST)திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆணி வருஷாபிஷேக விழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. 

தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும் கடற்கரை ஓரத்தலமுமானது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயிலில் ராஜகோபுரம், ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மூலவர் சுவாமி சுப்பிரமணியர் சிலை தை மாதம் உத்திர நட்சத்திரத்தன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. எனவே, இங்கு ஆண்டுதோறும் கொண்டாடப்படும் மிக முக்கிய திருவிழாக்களில் ஆனி வருஷாபிஷேகம் மற்றும் தை உத்திர வருஷாபிஷேக விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டிற்கான ஆனி வருஷாபிஷேக விழா, இன்று காலை நடைபெற்றது. இதை முன்னிட்டு, அதிகாலை 3 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு, தொடர்ந்து, 3.30 மணிக்கு விஸ்வரூபம் ஆராதனை, 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, கோயில் மகா மண்டபத்தில் உள்ள மூலவர் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை கும்பங்களுக்கும், குமரவிடங்கப் பெருமான் சந்நிதியில் சுவாமி சண்முகர் கும்பத்துக்கும் பெருமாள் சந்நிதி முன்பு வெங்கடாஜலபதி கும்பத்துக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

காலை 8 மணிக்கு கும்ப கலசங்கள் விமான தளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை ஆகிய சந்நிதிகளின் விமானங்களுக்கு போத்திமார்கள் மூலமும் சுவாமி சண்முகர் விமானத்துக்கு சிவாச்சாரியார்கள் மூலமும் வெங்கடாஜலபதி சந்நிதி விமானத்துக்கு பட்டாச்சாரியார்கள் மூலமும் புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சுவாமி குமரவிடங்கப் பெருமான், வள்ளி அம்பாள் தனித்தனி தங்கமயில் வாகனங்களில் எழுந்தருளி, திருவீதியுலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கல்நது கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வருஷாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளைத் திருக்கோயில் நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து

சங்கர்Jul 11, 2019 - 03:39:26 PM | Posted IP 162.1*****

வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory