» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சுசீந்திரம் கோவில் தெப்பக்குளம் சீரமைப்பு எப்போது ? தளவாய் சுந்தரம் பதில்

வியாழன் 11, ஜூலை 2019 12:22:28 PM (IST)



குமரி மாவட்டம் சுசீந்திரம் கோவில் தெப்பக்குளம் விரைவில் சீரமைக்கப்படும் என தமிழகஅரசின் டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம் தெரிவித்தார்.

சுசீந்திரம் கோவில் தெப்பக்குளத்தை மிழகஅரசின் டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆய்வு செய்தார். இதில் சுசீந்திரம் கோவில் தெப்பக்குளம் துர்நாற்றம் வீசுவதாகவும், பாசிபடர்ந்து மாசடைந்துள்ளதாகவும், இதனை சரிசெய்து தரவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் சம்மந்தப்பட்ட துறை மூலம் குழு அமைத்து ஆய்வறிக்கை தயார் செய்து மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும்.

இன்னும் 2 மாதங்களுக்குள் தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெறும். சுசீந்திரம் பழையாறு குறித்து முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின்போது பால்வளத்துறை தலைவர் எஸ்.ஏ.அசோகன், ஆரல்வாய்மொழி கூட்டுறவு சங்கத்தலைவர் கிருஷ்ணகுமார், கவிஞர் சதாசிவம் உட்பட பலர் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory