» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பள்ளி மாணவிகளிடம் சில்மி‌ஷம்- ஆசிரியர் கைது

வியாழன் 11, ஜூலை 2019 11:57:54 AM (IST)

கொல்லங்கோடு அருகே பள்ளி மாணவிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். 

குமரி மேற்கு மாவட்டம் கொல்லங்கோடு அருகே கல்பாறைபொற்றையில் தனியார் பள்ளி உள்ளது.இப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் டேவிட் ராஜ், (46). இவர், 6ம் வகுப்பில் படிக்கும் 3 மாணவிகளிடம் அடிக்கடி அத்துமீறி நடப்பதாக மாணவிகள் புகார் கூறினர்.கடந்த வெள்ளிக்கிழமையும் ஆசிரியர் டேவிட்ராஜ், 3 மாணவிகளிடம் அத்துமீறி நடந்ததோடு, சில்மி‌ஷத்திலும் ஈடுபட்டதாக தெரிகிறது.ஆசிரியர் சில்மி‌ஷம் செய்தது பற்றி மாணவிகள் 3 பேரும் அவர்களின் பெற்றோரிடம் கூறி அழுதனர். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடமும், நிர்வாகத்திடமும் புகார் கூறினர்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் இதுபற்றி கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசாரும், குழந்தைகள் நல அதிகாரிகளும் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.குழந்தைகள் நல அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஆசிரியர் டேவிட்ராஜ், மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் கொல்லங்கோடு போலீசில் புகார் கொடுத்தனர்.கொல்லங்கோடு போலீசார் டேவிட்ராஜை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர், குளச்சல் அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். மகளிர் போலீசார் ஆசிரியர் டேவிட்ராஜை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory