» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு : மாணவி தற்கொலை

வியாழன் 11, ஜூலை 2019 11:18:22 AM (IST)

புதுக்கடை அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கடை அருகே மேலக்கோட்டவிளையை சேர்ந்தவர் அருளப்பன். இவருடைய மனைவி லதா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இளைய மகள் லதா ( 17). இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு ஆட்டோ டிரைவருக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து லதாவின் பெற்றோருக்கு தெரிய வந்தது. உடனே, அவர்கள் தங்களுடைய மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதே சமயத்தில் மகளை கண்டித்ததாகவும் தெரிகிறது.இதனால் விரக்தியடைந்த லதா சம்பவத்தன்று இரவு அவர் வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்த புதுக்கடை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அஜிஸ் சஜிலின் லதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மேலும் இதுதொடர்பாக புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory