» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நடிகையை காரிலிருந்து தூக்கி வீசிய டிரைவர் கைது

வியாழன் 11, ஜூலை 2019 10:17:15 AM (IST)

வாடகை காரில் பயணம் செய்த நடிகையை திடீரென்று தூக்கி வீசிய டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

வங்காள மொழி படங்கள் மற்றும் டிவி சீரியல்களில் நடித்து வருபவர் சுவஸ்திகா தத்தா. இவர் தன்னை காரிலிருந்து தூக்கி வீசிய சம்பவம் பற்றி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது வீட்டிலிருந்து படப்பிடிப்பிற்காக சவுத் கொல்கத்தா பகுதியில் உள்ள சினிமா ஸ்டுடியோ செல்வதற்கு தனியார் வாடகை காரை புக் செய்தேன். ஜாம்ஷெட் என்ற டிரைவர் காரை எடுத்து வந்து அழைத்துச் சென்றார். ஆனால் நடுவழியிலேயே காரை நிறுத்தி எனது புக்கிங்கை ரத்து செய்துவிட்டு காரிலிருந்து என்னை இறங்கும்படி கூறினார். படப்பிடிப்புக்கு நேரம் ஆனதால் காரிலிருந்து இறங்க மறுத்தேன்.

இதையடுத்து டிரைவர் காரை திருப்பிக்கொண்டு எனது வீடு உள்ள பகுதியில் கொண்டு வந்து நிறுத்தினார். பிறகு காரிலிருந்து இறங்கி வந்த டிரைவர் என்னை காரிலிருந்து தூக்கி வெளியே வீசினார். எனக்கு கோபம் வந்தது. அருகிலிருந்தவர்களை உதவிக்கு அழைத்தேன். உடனே டிரைவர் என்னை மிரட்டிவிட்டு, உன்னால் என்ன முடியுமோ செய், நீ என்ன செய்கிறாய் என்று பார்த்துவிடுகிறேன் என மிரட்டல் தொனியில்பேசிவிட்டு சென்றார். எனக்காக படக்குழுவினர் ஸ்டுடியோவில் காத்திருந்ததால் நான் உடனே செல்ல வேண்டியிருந்தது. 

எனவே செல்போனில் எனது தந்தையை அழைத்து நடந்த சம்பவம்பற்றி கூறி சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை மேற்கொள்ளும்படி தெரிவித்தேன். இவ்வாறு சுவஸ்திகா தத்தா கூறி உள்ளார். ஃபேஸ்புக்கில் நடிகை வெளியிட்ட இந்த மெசேஜை கண்ட கொல்கத்தா போலீசார் தங்களது டுவிட்டர் பக்கத்தில் நடிகைக்கு மேசேஜ் அனுப்பினார்கள். அதில், உங்களுடைய புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டிருந்தனர். மேற்கொண்டு விசாரணை நடத்தி டிரைவரை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory