» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வைகோவிற்கு அதிமுக உறுப்பினர் வாழ்த்து சுவரொட்டி : அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

புதன் 10, ஜூலை 2019 1:31:49 PM (IST)தூத்துக்குடியில் மதிமுக பொது செயலாளர் வைகோவிற்கு வாழ்த்து சுவரொட்டி ஒட்டிய அதிமுக உறுப்பினரால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. சட்டமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் அடிப்படையில், திமுக 3 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்ய முடியும். அதன் அடிப்படையில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

திமுக சார்பில் சண்முகம், வில்சன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஒரு இடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு ஒதுக்கப்பட்டு, அவரும் மனு தாக்கல் செய்தார். ஆனால், தேசத் துரோக வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் உள்ள வைகோவுக்கு, இந்தத் தேர்தலில் போட்டியிடுவதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டு, அவரது மனு நிராகரிக்கப்படலாம் என பரவலாகப் பேசப்பட்டது. இதனால் மாற்று ஏற்பாடாக திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்கள்  பரிசீலனை செய்யப்பட்டதில் வைகோவின் மனு ஏற்கப்பட்டது. திமுக வேட்பாளர்கள் சண்முகம், வில்சன் ஆகியோரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டன. எனவே, வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆவதில் உள்ள சிக்கல் நீங்கி உள்ளது. எனவே, வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆவது உறுதியானநிலை ஆனதால் மதிமுகவினர் மகிழ்ச்சியாய் கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விற்கு வாழ்த்து தெரிவித்து தூத்துக்குடி மாநகர் முழுவதும் அதிமுக உறுப்பினர் வழக்கறிஞர் ஜோசப்செங்குட்டுவன் சுவரொட்டி ஒட்டி இருக்கும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கறிஞர்  ஜோசப்செங்குட்டுவன் தூத்துக்குடி மாவட்டத்தின் முன்னாள் மதிமுக செயலாளர் என்பது குறிப்பிடதக்கது.


மக்கள் கருத்து

சாமிJul 11, 2019 - 11:23:52 AM | Posted IP 162.1*****

ஓடிப்போனவரா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory