» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நகை மதிப்பீட்டாளர் வீட்டில் 44 பவுன் நகை திருட்டு

வியாழன் 27, ஜூன் 2019 12:10:46 PM (IST)

மார்த்தாண்டம் அருகே கூட்டுறவு வங்கியின் நகை மதிப்பீட்டாளர் வீட்டின் பூட்டை உடைத்து 44 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

மார்த்தாண்டம் அருகேயுள்ள கல்லுத்தொட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் ஆசாரி (59). இவர், சாங்கை பகுதியிலுள்ள கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராகவும் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன், திருநெல்வேலியில் மணம் முடித்திருக்கும் மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டு, சம்பவத்தன்று மாலையில் வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டுக் கதவுகள் திறந்து கிடந்தனவாம். 

மேலும், வீட்டினுள் அலமாரி உடைக்கப்பட்டு அதிலிருந்த 44 பவுன் தங்க நகைகள் திருடுபோயிருப்பது தெரியவந்தது.இதுகுறித்து, அவர் மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.  போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும்,  தக்கலை டி.எஸ்.பி. கார்த்திகேயனும் அங்கு விசாரணை நடத்தினார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory