» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பெண்ணை நூதனமாக ஏமாற்றி தங்க நகை பறிப்பு

வியாழன் 27, ஜூன் 2019 11:04:33 AM (IST)

ஆரல்வாய்மொழியில் பெண்ணை ஏமாற்றி தங்க நகையைப் பறித்துச் சென்றவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை அடுத்த லாயம் பத்மநாபபுரம் ஆசிரியர் காலனி தெருவைச்சேர்ந்த ராஜலிங்கம் மனைவி புஷ்பம்(55). அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.  இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை புஷ்பத்தின் டீக்கடைக்கு ஒரு இளைஞர் மோட்டார்பைக்கில் வந்தார். அவர் புஷ்பத்திடம் சிகரெட் வாங்குவதுபோல் நடித்து, திடீரென அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்தாராம்.  அவர் கூச்சலிட்டதும், ராஜலிங்கம் ஓடி வந்து  அந்த இளைஞரைப் பிடிக்க முயன்றதாக தெரிகிறது. ஆனால், 

அவரை தள்ளிவிட்டு கையில் கிடைத்த ஒன்பதரை பவுன் நகையுடன் தப்பிவிட்டாராம்.  அந்த நபர் மோட்டார் பைக்கைஅங்கேயே போட்டுவிட்டு சென்றாராம். இதுகுறித்த புகாரின்பேரில், ஆரல்வாய்மொழி போலீஸார் வழக்குப் பதிந்து, மோட்டார்பைக்கை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory