» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

களியக்காவிளையில் பிளாஸ்டிக் ஒழிப்பு தீவிரம்

வியாழன் 27, ஜூன் 2019 10:47:50 AM (IST)

களியக்காவிளை பகுதியில் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டைத் தடுக்க அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

களியக்காவிளையில் பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ் தலைமையில் பணியாளர்கள், போலீஸார் படந்தாலுமூடு அந்திச் சந்தை, களியக்காவிளை சந்திப்பு, அதையொட்டிய பகுதியிலுள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டனர்.  அப்போது, சில கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. அக்கடையிலிருந்து 8 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்திய கடைகள், வியாபாரிகளுக்கு ரூ. 5,500 அபராதம் விதிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory